வாடிக்கையாளர்களுக்கு 15GB டேட்டாவினை மேலதிகமாக வழங்கும் பிரபல நிறுவனம்

தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாகவே அதிகளவான மக்கள் அறிந்துவருகின்றனர்.

அதுமாத்திரமன்றி அநேகமான நாடுகளில் மக்கள் வீட்டிலே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றினைக் கருத்தில்கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கிவருகின்றன.

இதேபோன்று Verizon Wireless நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 15GB டேட்டாவினை மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

அதுமாத்திரமன்றி குறைந்த வருமானமுடையவர்களுக்கும் குரல்வழி அழைப்புக்களுக்கான சில சலுகைகளை குறித்த நிறுவனம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!