வாட்ஸ்அப் பாவனையாளரா? கவனம்..ஜாக்கிரதை

ஒவ்வொரு முறையும் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போதும் உங்களை கூகுள் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?

வாட்ஸ்ஆப் நம் அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. அதன் நன்மைகளை அடுக்கிக்கொண்டே சென்றாலும் தவிர்க்க முடியாத ஆபத்துகளும் இல்லாமல் இல்லை.

இந்த வகையில் நம்மை அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது அதனை கூகுள் கண்காணிக்கிறது. அது மட்டும் அல்லாமல் நீங்கள் எவ்வளவு நேரம் கூகுளில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறீர்கள், எதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்கிறீர்கள் போன்றவையும்  கூகுள் கண்காணிக்கிறது.

உங்கள் மொபைலில் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டிகளை கண்காணிக்கும் ஆப்ஷன் ஆன் செய்து வைக்கப்பட்டு இருந்தால் இவ்வாறு நடக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதனை மாற்றி வைப்பதன் மூலம் கண்காணிப்பில் இருந்து விலக முடியும்.

உங்கள் கூகுள் அக்கவுண்டை பயன்படுத்தி இதனை நீங்கள் பார்க்கலாம். கூகுள் அக்கவுண்ட்டில் டேட்டா அண்ட் பெர்சனலைசேஷனில் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் Web & App activity  ஆன் செய்து இருக்கிறது என்பதை பாருங்கள். ஆன் செய்து இருக்கும் பட்சத்தில் அதில் சேவ்-ஆகி இருப்பவற்றை நீங்கள் பார்க்க முடியும். பின்னர்  இதனை ஆஃப் செய்து விடலாம்.

Sharing is caring!