வாட்ஸ்ஆப் மாதிரியான வசதியுடன் மெசெஞ்சர்
வாட்ஸ்ஆப்பில் இருப்பது போன் எந்த மெசேஜுக்கு பதில் அளிக்க விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டு ரிப்ளை செய்யும் வசதி பேஸ்புக் மெசேஞ்சரில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மெசேஜிங் செயலியாக இருப்பது வாட்ஸ்ஆப். இது பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும் பேஸ்புக்கிலேயே மெசேஜிங் வசதிக்காக மெசேஞ்ர் என்ற வசதியும் உள்ளது. இதில் பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடலாம்.
கிட்டத்தட்ட வாட்ஸ்ஆப் போன்ற வசதிகள் இருந்தும் இதற்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் இல்லை. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் இருக்கும் முக்கிய வசதி ஒன்று மெசேஞ்சரிலும் வரயிருக்கிறது. வாட்ஸ்ஆப்பில் எந்த மெசேஜுக்கு ரிப்ளை செய்கிறோம் என்பதை குறிப்பிட்டு மெசேஜ் செய்ய முடியும். அதே வசதி மெசேஞ்சரிலும் வர உள்ளதாக தெரிகிறது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S