வாட்ஸ் அப் நிறுவனத்தின் டார்க் மோட் டிசைன் லீக்… லீக்!!!

சென்னை:
லீக் ஆகி உள்ளது… லீக் ஆகி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம் பரிசீலித்து வரும் டார்க் மோட் டிசைன்.

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த வாட்ஸ்அப்பின் ‘டார்க் மோட்’  என்ற வசதி விரைவில் வர இருப்பதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் பரிசீலித்து வரும் ஒரு டிசைன் லீக்காகியுள்ளது.

பல்வேறு மொபைல் செயலிகள், டார்க் மோட் என்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த டார்க் மோட் வசதியின் மூலம், இரவில், வெளிச்சம் குறைவான நேரம் மொபைலை கண் கூசாமல் பயன்படுத்த முடியும்.

பிரவுசர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆப்களில், டார்க் மோட் என்ற வசதி ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால், உலகிலேயே அதிகம் பயன்படுத்தும், வாட்ஸ்அப்பில் இன்று வரை டார்க் மோட் இல்லை. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் டார்க் மோட், விரைவில் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அப்டேட் மூலம் கிடைக்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டார்க் மோடின் டிசைன் பற்றிய ஒரு புகைப்படம் லீக்காகியுள்ளது. இதை, சமூகவலைதளத்தில் வாட்ஸ்அப் அப்டேட்கள் பற்றி அடிக்கடி பதிவிட்டு வரும் ட்விட்டர் பக்கம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, வாட்ஸ்அப்பின் பேக்ரவுண்ட் முழுவதும் கருப்பாகவும், எழுத்துக்கள் வெள்ளையாகவும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், இரவு நேரங்களில், படுத்துக்கொண்டே வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கும், இருட்டில் பயன்படுத்துவதற்கும், மிகவும் வசதியாக இருக்கும் என நெட்டிசன்கள்கூறுகின்றனர்.

மேலும், டார்க் மோட் வந்தபின்னர், மொபைலின் பேட்டரி சார்ஜும் கம்மியாக செலவாகும் என்பதால், இந்த அப்டேட்டுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!