வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள புத்தம் புதிய வசதி

துல்லியமான வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியானது பில்லியன் விரையான பயனர்களால் இன்று பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக Wallpaper வசதி ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஏற்கணவே சட் செய்யும் பின்னணியை மாற்றக்கூடிய வசதி தரப்பட்டிருக்கின்றது.

எனினும் இப் புதிய வசதியின் மூலம் பயனர்கள் ஒவ்வொரு சட்டிற்கும் தாம் விரும்பிய Wallpaper பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை WABetaInfo வெளியிட்டுள்ளது.

இதன்படி iOS சாதனங்களுக்கான 2.20.90.21 பதிப்பில் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதனைத் தொடர்ந்து அன்ரோயிட் சாதனங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!