வானில் ஏராளமான அதிசயங்கள்

வானில் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அறிந்து கொள்ள ஏராளமான நாடுகளின் செயற்கைக் கோள்கள் விண்ணில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நாசா அனுப்பிய நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தொலைநோக்கி அர்ரே தொலைதூர வானியல் நிகழ்வுகளை படம் பிடித்து புவிக்கு அனுப்பி வருகிறது. அதன்மூலம் கிடைத்த அண்மைய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் கை போன்ற வடிவில் விண்பொருள் ஒன்று தென்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு அதன்மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் கை போன்ற வடிவை உருவாக்கியுள்ளன.

குறிப்பாக உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர்கள் நீள நிறத்திலும் குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலும் தெரிவதாக கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு ஒருபுறம் அறிவியலின் அதிசயமாக இருந்தாலும் சாதாரண மனிதர்கள் அதை ‘கடவுளின் கை’ என்றே குறிப்பிடுகின்றனர். இதே பெயருடன் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!