விண்ணிலிருந்து வந்த மர்மச் சத்தம்…!! உலக அழிவிற்கான அறிகுறியா..?

ஜோத்பூர் நகரில் மிக மர்மமான முறையில் விண்ணிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. உலகம் அழிப்போவதற்கான அறிகுறியாக பலர் அந்த சத்தத்தை நம்பினர். அந்த சத்தம் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். அமானுஷ்யங்கள்:இந்த உலகம் அமானுஷ்யங்கள் நிறைந்தது. பல விஷயங்களுக்கு நம்மால் காரணமே கண்டு பிடிக்க முடியாது. சில விஷயங்கள் விஞ்ஞானங்களையும் மீறி நடக்கும். சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்றே தெரியாது. அப்படியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ஒரு தீராத மர்மத்தை கீழே காணலாம். வாருங்கள்.ஜோத்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரம் மிகவும் பிரபலம். அந்த நகரின்அழகிற்காகவே பலர் டூரிஸ்ட்களாக அந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணகான டூரிஸ்ட்கள் வந்து செல்லும் இந்த ஊரில் 2012ம் ஆண்டு நடந்த ஒரு விஷயம் அந்த ஊர் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே உலுக்கியது. இந்த சம்பவம் உலகிற்கே அழிவை ஏற்படுத்தும் என மக்கள் நம்பினர்.

டிச 18, 2012:சரியாக 2012ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி எப்பொழுதும் போல அழகான காலையாகதான் அந்த ஊரில் விடிந்தது. அந்த ஊரில் மக்கள் எல்லாம் அவரவர் வேலைகளை வழக்கம் போல பார்க்க துவங்கினர்.சத்தம்:சரியாக காலை 11.25 மணிக்கு ஜோத்பூரிலிருந்து சரியாக 60 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விண்ணிலிருந்து காதை கிழிக்கும் வகையில் வகையில் வந்த சத்தம் எல்லோரது காதையும் கிழிக்கும் வகையில் இருந்தது. சிலநொடிகள் இருந்த சத்தம் பின்னர் இல்லாமல் போனது.

விபரீதம்:இந்த சத்தம் கேட்டு எல்லோரும் ஒரு நிமிடம் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை நிறுத்திவிட்டு இது என்ன சத்தம் என யோசித்தனர். யாருக்கும் புலப்படவில்லை. சத்தம் நின்று சில விநாடிகளில் சிலருக்கு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது. என்பதை உணர்ந்தனர்.சோனிக் சத்தம்:சிலர் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ராணுவ முகாமல் ஏதேனும் விபத்துக்கள் அல்லது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என நினைத்தனர். சிலர் இது விமானம் வெடித்த சத்தம் என நினைத்தனர். சிலர் இதை சோனிக் சத்தம் என கருதினர்.

சூப்பர் சோனிக் விமானம்:சோனிக் சத்தம் என்றால் ஒலியின் வேகத்தை விட ஒரு பொருள் வேகமாக பயணித்தால் இப்படியாக ஒரு சத்தம் கிளம்பும் இந்த சத்தம் காற்றில் ஏற்படும் பிளவு மூலம் ஏற்படுகிறது.இந்த சத்தம்தான் ஏற்பட்டுள்ளது. ஏதாவது சூப்பர் சோனிக் விமானம் குறைவான உயரத்தில் பறந்திருக்கலாம் என பலர் எண்ணினர்.விமானம் பறக்கவில்லை:ஆனால், இது குறித்து ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது ராணுவ முகாமிலிருந்து அப்படியாக எந்த சத்தமும் ஏற்படவில்லை என்று கூறினார். விமான கட்டுப்பாட்டு மையமும் குறிப்பிட்ட அந்த இடத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை என அறிவித்துவிட்டது.

என்னதான் நடந்தது?: அப்பொழுது என்னதான் நடந்தது. வெடிவிபத்துக்களும், ஏற்படவில்லை, விமான விபத்தோ, அல்லது சூப்பர் சோனிக் விமானங்களும் பறக்கவில்லை. பின்னர் என்னதான் நடந்தது? இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.மாயன் காலண்டர்:இந்தச் சத்ததிற்கு பலர் பல விதமான காரணங்களை சொன்னார்கள். குறிப்பிட்ட அந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் மாயன் காலண்டர் குறித்த பீதி மக்களிடையே இருந்தது. அதாவது. 2012ம் டிசம்பர் 21ம் தேதியுடன் உலகமே அழிப்போவதாக பலர் நம்பினர். அதன் விளைவாக தான் இந்த சத்தம் ஏற்பட்டிருக்கும் எனவும். உலக அழிவு துவங்கிவிட்டது என பலர் நம்பினர்.

உலகம் அழிவு:ஆனால் அப்படியாக எந்த சம்பவமும் உலகில் எந்த பகுதியிலும் பதிவாகவில்லை. டிச 21ல் உலகமும் அழியவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்களிடையே உலக அழிவு குறித்த பீதி அதிகமானது. பலர் இந்த சம்பவத்திற்கு பின்பு நிச்சயம் உலகம் அழியப்போவதாகவே நம்பினர்.அணு ஆயுதங்கள்:சிலர் இந்தியா அணு ஆயுதங்களை சோதித்துள்ளதாக நினைத்தனர். அதாவது இந்தியா அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் உள்ளது. ஆனால் இந்தியா இதுவரை அணு ஆயுதங்களை சோதிக்கவில்லை. அமெரிக்கா மட்டுமே சோதித்துள்ளது.

ஹீரோஷிமா- நாகசாகி:அனு ஆயுதங்களை சோதித்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், ஹீரோஷிமா, நாகசாகி பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். அந்த அளவிற்கான பாதிப்பு ஏற்படும். அதனால் அந்த நாடும் அதை முயற்சிக்காது.
பாதுகாப்பான சோதனை:ஆனால், இந்தியா அதை பாதுகாப்பாக சோதனை செய்யும் முறையை கண்டறிந்து அந்த முறையில் அணுஆயுதங்களை சோதனை செய்து அதை சக்தியை வைத்து மின் உற்பத்தி மற்றும் மற்ற தேவைகளை நிறைவேற்றியதாக கூறினர்.தொழிற்நுட்பம் இல்லை:ஆனால், இந்திய அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. அப்படியான எந்த சோதனையும் செய்யவில்லை. பாதுகாப்பாக இவ்வளவு பெரிய அணு ஆயுதங்களை பாதுகாப்பாக பயன்படுத்த எந்த தொழிற்நுட்பமும் இல்லை என கூறியது.

மின் உற்பத்தி:குறிப்பிட்ட அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தமிழ்நாடு கூட கிட்டத்தட்ட 16 மணி நேரம் மின் வெட்டை சந்தித்து வந்தது. அந்த காலத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பலர் மின் உற்பத்திகாக இது நடந்திருக்கலாம் என பலர் கருதினர்.ரகசிய சோதனை:சிலர் இது இந்திய அரசு நடத்திய ஏதோ ரகசிய சோதனை என்றே இன்றும் நினைத்துவருகின்றனர். ஆனால் அப்படியான எதுவும் நடத்தப்படவில்லை. வந்த சத்தம் ஒரு மர்மமான சத்தம் தான் என இந்திய அரசு சொல்லிவிட்டது.தெளிவான சத்தம்:இந்த சத்தம் வந்ததை அந்த பகுதியிலிருந்த பலர் தெளிவாக கேட்டுள்ளனர். இதை கேட்ட ஆட்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் இந்த சத்தம் இந்தபகுதியை தவிர சுற்றியுள்ள மற்ற எந்த பகுதியிலும் கேட்கவில்லை.தீராத மர்மம்:இப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கேட்ட இந்த மர்மமான சத்தம் எங்கிருந்து வந்தது? எதனால் வந்தது? அந்த சத்தம் ஏற்பட்டதால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? அல்லது இது ஏதேனும் ஆபத்திற்கான குறியீடா? எல்லாமே ஒரு தீராத மர்மம்தான்.

Sharing is caring!