விண்வெளிக்கு வீரர்கள்…இஸ்ரோ தெரிவிப்பு

வரும் 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என  இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் இன்று மேலும் கூறியது:
வரும் 2020 டிசம்பரிலும், 2021 ஜூலையிலும் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 2021 டிசம்பரில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய திரும்புமுனையாக அமையவுள்ள “ககன்யான்” எனப்படும் இந்தத் திட்டத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்திய மாணவர்களின் நலன்கருதி, நாடு முழுவதும் விண்வெளி ஆய்வுகள் தொடர்பான ஆறு மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் நாசாவிற்கு செல்வது தவிர்க்கப்படும் என சிவன் கூறினார்.

மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!