விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மொபைல் கைப்பேசிக்கு SMS அனுப்ப முயற்சி வெற்றி

Lynk எனப்படும் புதிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன்படி முதன் முறையாக விண்வெளியிலிருந்து பூமியிலுள்ள கைப்பேசிக்கு SMS அனுப்பியுள்ளது.

பூமியின் குறைந்த மட்ட ஒழுக்கிலுள்ள செயற்கைக்கோள் ஒன்றிலிருந்தே இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குறுஞ்செய்தியை பெற்ற முதலாவது கைப்பேசியாக அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி திகழ்கின்றது.

இந்த வெற்றியை அடுத்து பூமியில் உள்ள 5 பில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு புரோட்பேண்ட் இணைப்புக்களை நேரடியாக செயற்கைக்கோளிலிருந்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவே தமது அடுத்த இலக்கு எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.