விபரீதமான யோசனையினால் வீண் வம்பை விலை கொடுத்து வாங்கத் தயாராகும் விஞ்ஞானிகள்..!! மனித இனத்தின் இருப்பிற்கும் ஆபத்தாக மாறலாமாம்..!!

மனிதனின் மூளையில் உள்ள செல்கள் சிலவற்றை எடுத்து, அதனை குரங்கின் மூளையில் போட்டு பரிசோதனைகளை நடத்தி வருகிறார்கள் விஞ்ஞானிகள். இதேவேளை மனித குலம், அறிவிலும் ஆற்றலிலும் திறமையாக இருக்க காரணமாக இருக்கும் செல்களை பிரித்து எடுத்து, அந்த செல்களையும் குரங்கிற்கு ஏற்றியுள்ளனர் விஞ்ஞானிகள். இந்த பரிசோதனைக்கு ARHGAP11B என்று பெயர் சூட்டியும் உள்ளார்கள்.

இந்த உலகில் மனிதர்கள் இன்றுவரை வாழ்கிறார்கள் என்றால் அதற்கு மூல காரணமே மனித மூளை தான். அந்த அறிவை எடுத்து வேறு ஒரு மிருகத்திற்கு கொடுத்து. அதுவும் மனிதர்களை ஒத்த குரங்கிற்கு கொடுத்து. நாளை அது வளர்ச்சி கண்டால் மனிதரின் நிலை என்னவாகும் ?

ஒரு காலத்தில் குரங்குகள் வளர்ச்சி கண்டு, மனிதர்களை அடிமையாக்கி, இந்த பூமியில் வாழ்வது போல ஒரு சினிமா படம் ஏற்கனவே வந்து விட்டது. அதனை நிஜமாக்க எண்ணுகிறார்களா இந்த விஞ்ஞானிகள் தெரியவில்லை.குறித்த செல்கள் ஏற்றப்பட்ட குரங்குகளின் மூளை அதீத வளர்சி கண்டுள்ளதாக தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இது தேவையா ? இயற்கையை ஏன் மாற்றி அமைக்க வேண்டும்.?

Sharing is caring!