வியாழனை சுற்றும் 12 நிலவுகள் கண்டுபிடிப்பு

சூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய கோளான வியாழனை சுற்றி வரும் 12 புதிய துணைக்கோள்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வியாழன் கோளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆய்வை கையில் எடுத்துள்ள அமெரிக்க ஜூனோ விண்கலத்தை அனுப்பி பல புகைப்படங்களை எடுத்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சூரியக்குடும்பத்தில் 5-வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கோளம். இங்கு ஒரு நாள் என்பது 10 மணிக்கும் குறைவான நேரமே. 9 மணி 50 நிமிடத்தில் இந்தக் கோள் தன்னைத்தானே சுற்றிவிடுகிறது.
சந்திரன், வெள்ளிக்கு அடுத்தபடியாக சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கும் கோளும் இதுதான். பூமியைவிட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை கொண்ட வியாழன் கோள் அதிக துணைக்கோள்கள்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோள் என்ற சிறப்பு வியாழனுக்கு கிடைத்துள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளின் எண்ணிக்கையோடு சேர்த்தால் வியாழனை சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 79ஆகும். அமெரிக்கா மற்றும் சிலி நாடுகளில் உள்ள தொலைநோக்கிகளின் உதவியோடு புதிய துணைக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. வியாழனுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக சனிக் கோளை 62 நிலவுகள் சுற்றி வருகின்றன.

பயோனியர், வாயேஜர் போன்ற விண்கலன்களின் ஆய்வுப்படி வியாழனில் உள்ள மொத்த துணைக்கோள்களின் எண்ணிக்கை 63. 1989-ம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம்தான். கலிலியோ வியாழனின் துணைக் கோள்களுள் யுரோப்பாவும் ஒன்று என்றும் அதன் உள்பகுதியில் உப்பு நீர்க் கடல் இருப்பதையும் ஆராய்ந்து வெளியிட்டது. 2003 ஆம் ஆண்டு வியாழனின் வளிமண்டலத்தில் மோதி கலிலியோ செயல் இழந்தபின் 2011 ஆம் ஆண்டு ஜூனோ விண்கலம், வியாழனுடன் சேர்ந்து அதன் பயணத்தை தொடங்கியது குறிப்பிடதக்கது.

Sharing is caring!