வீடியோக்களின் தரத்தினை குறைத்தது யூடியூப்..!!

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக அளவில் பல நாடுகளில் பல்வேறு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் இணைய சேவையினை நிறுத்த முடியாத அளவிற்கு அவசியமாக காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டு சேவையை வழங்குவதற்கு வெவ்வேறு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்நிலையில் Netflix நிறுவனம் தனது தளத்தில் வீடியோக்களை குறைந்த தரத்திலேயே பயனர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஐரோப்பாவில் உள்ள பயனர்களுக்கு குறைந்த தரத்தில் (SD) வீடியோக்களை பார்வையிடக்கூடியதாக தனது சேவையில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக யூடியூப் தற்போது அறிவித்துள்ளது.

மக்களை வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கும் பாடசாலைகள் விடுமுறை வழங்கியுள்ளன.

இதனால் இணையப்பாவனை அதிகரித்துள்ளதுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றமையே இந்த முடிவுக்கு காரணமாகும்.

Sharing is caring!