வெறும் 90 நிமிடத்தில் கொவிட்-19 தொற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் புதிய சாதனம்!

ஒரு சிறப்பு ஆய்வகம் தேவையில்லாமல் 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை துல்லியமாக கண்டறியும் புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில், ‘லேப்-ஆன்-எ-சிப்’ என்ற புதிய சாதனம், தற்போதைய சோதனைகளுடன் ஒப்பிடத்தக்க முடிவுகளைக் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.வைரஸைச் சுமக்கும் நோயாளிகளை விரைவாக அடையாளம் காண இந்த சாதனம் ஏற்கனவே எட்டு தேசிய சுகாதார சேவை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், சிக்கலான சோதனை மற்றும் தடமறிதல் திட்டத்திற்கு கிட் ஒரு தீர்வாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.DnaNudge என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், மூக்கு அல்லது தொண்டையின் பகுதியுடான செலுத்தப்படும் ஒரு குச்சியின் ஊடாக எவருக்கும் பயன்படுத்தப்படலாம்.

Sharing is caring!