வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தான் வேற்றுக் கிரக உயிரனங்கள் அனுப்பிய தகவல்கள் முதலாவதாகக் கிடைத்துள்ளன. கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். தகவல்கள் வெளிப்படுத்தும் செய்திகள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தங்களுடைய ரேடியோவுக்கு ‘சிக்னல்’ கிடைத்ததை அறிந்த விஞ்ஞானிகள் மிகவும் சந்தோசம் அடைந்தனர். இந்த ‘சிக்னல்’ சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்றிலிருந்து வந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நட்சத்திரத்தை HD 164595 என்னும் பெயரால் அடையாளப்படுத்துகின்றனர். இந்த அடையாளம் மிகச் சரியானதுதானா என்று சொல்ல முடியவில்லை. இருந்தாலும் பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தகவல் பரிமாற்றத்திற்கான ‘சிக்னல்’ கிடைத்திருப்பதுதான் இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த விண்மீன் ஹெர்குலஸ் என்னும் நட்சத்திரக் கூட்டத்திலிருந்து சுமார் 95 ஒளி ஆண்டுகள் (light years ) தொலைவில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது ஒரு இயற்கையான நிகழ்வுதான், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாசாவுக்கும், ரஷ்ய விண்வெளி அமைப்பிற்கும் வேற்றுக் கிரகத்திலிருந்து தகவல்கள் கிடைப்பது இது முதல் முறை அல்ல எனவும் சில விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.
நாசாவும் ரஷ்யாவும் விண்வெளியிலிருந்து வந்த மர்மான தகவலைப் பெற்றுள்ளனர் என்று, இனம் காண முடியாத வகையில் வானில் பறக்கும் ஊர்திகளைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் (UFO researchers) உறுதியாகக் கூறுகின்றனர். பூமி அல்லாத வேறு கிரகத்தில் மனிதர்களைப் போல அறிவுத்திறன் படைத்த உயிரினங்கள் உள்ளனவா என்பதை SETI என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் மூலமாக இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 29.08.2016 அன்று விண்வெளியில் உள்ள சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்திலிருந்து சிக்னல் வந்தததை இவர்கள் கவனித்துள்ளனர். அது பூமியிலிருந்து வரும் தகவல் தொடர்புக்கான சிக்னல் போலவே இருந்திருக்கிறது. இந்த நிகழ்வு, வேற்றுக்கிரகத்தில் பூமியில் உள்ளதைப் போன்ற அறிவு மிகுந்த மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி உள்ளன.

உலகில் சில இடங்களில் பரந்த விளை நிலங்களில் திடீரென அதிசயிக்கத்தக்க வகையில் வட்ட வடிவமான தோற்றங்கள் உண்டாகியிருக்கின்றன. இவை எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை. வேற்றுக்கிரக உயிரினங்களின் வான ஊர்திகள் வந்து இறங்கிய தடங்களாக அவை இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லாததால் இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

Sharing is caring!