ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் Xiaomi

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Xiaomi நிறுவனமானது இந்த மாதம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள Mi 10 எனும் இக் கைப்பேசியானது 6.67 அங்குல அளவுடைய AMOLED Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 865 processor, பிரதான நினைவகமாக 12GB RAM என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 108 மெகாபிக்சல்கள், 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இதன் சேமிப்பு நினைவகம், விலை தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

விரைவில் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.