ஹொட்டல்களில் வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்யும் பெண் ரோபோக்கள்..!! கேரளாவில் அசத்தும் உணவு விடுதி..!!

கேரளாவில், உணவு விநியோகம் செய்யும் பெண் ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது ஒரு உணவு விடுதி.தற்போது உலகில் பல இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக, ரோபோக்களை வேலைகளுக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது கேரளாவில் உள்ள ஒரு உணவு விடுதியில், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற பெண் ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளனர்.கேரளாவில் கண்ணூரில் உள்ள இந்த உணவு விடுதியில் அலீனா, ஹெலன், ஜேன், என்ற பெயரில் 3 அதிநவீன ரோபோக்கள் மூலம் உணவு பரிமாறி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்த ரோபோக்கள் வாடிக்கையாளர்களின் அழைப்பிற்கு ஏற்ப அவர்களை நோக்கி செல்லும். நமக்கு தேவையான உணவுகளை பட்டியலிட்டால் அவற்றை பதிவு செய்து உணவை கொண்டு வந்து கொடுக்கும். மொபைல் செயலிகள் மூலம், இந்த ரோபோக்களை விடுதி உரிமையாளர்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். கேரளாவிலேயே முதல் முதலாக உணவு விடுதியில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், வாடிக்கையாளர்களை இது பெரிதும் கவர்ந்துள்ளது.

Sharing is caring!