117 புதிய எமோஜிகள்; யூனிகோட் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியது

யூனிகோட் கூட்டமைப்பு (Unicode Consortium) 117 புதிய எமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் எமோஜி 13.0 இன் ஒரு பகுதியாக வெளியிடப்படும். 62 புதிய எமோஜிகள் மற்றும் 55 புதிய பாலினம் மற்றும் ஸ்கின் டோன் வகைகள் உள்ளன.

இதில் பாலினம் உள்ளடக்கிய விருப்பங்களும் உள்ளன. அவற்றில் சில மிகவும் வேடிக்கையானதாகவும் இருக்கின்றது – சிரித்த முகத்துடன் கண்ணீருடன், கண்ணாடிகளுடன் கூடிய முகம் மற்றும் மீசையுடன், நிஞ்ஜா மற்றும் கரப்பான் பூச்சியுடன் உங்கள் நண்பர்களை ட்ரோல் செய்ய இந்த புதிய எமோஜிகள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வரிசையில் பல புதிய எமோஜி விருப்பங்கள் உள்ளன. இந்த பட்டியலில் ஒரு திருநங்கைகளுக்கான கொடி மற்றும் (கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிதியுதவி அளித்த திட்டம்), அத்துடன் திருநங்கைகளின் சின்னத்திற்கான எமோஜியும் உள்ளன.

மேலும் பாலினம் உள்ளடக்கிய எமோஜிகளை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்திய கூகிள், “பெர்சன் இன் வெய்ல்” எமோஜிக்கான அனைத்து பாலின விருப்பங்களையும் முன்மொழிந்தது (இப்போது, அந்த எமோஜி ஒரு பெண்ணை மட்டுமே சித்தரிக்கிறது) மற்றும் “பெர்சன் இன் டக்ஷீடோ” எமோஜியும் (இது தற்போது ஒரு ஆணை மட்டுமே சித்தரிக்கிறது) உள்ளது. கூகிள் முன்மொழியப்பட்ட ஒரு புதிய அனைத்து பாலின “பெர்சன் ஃபீடிங் பேபி வித் எ பாட்டில்” (குழந்தைக்கு ஒரு நபர் பாலூட்டுவது) எமோஜியும் உள்ளது.

இது அனைத்து பாலின மக்களுக்கும் ஒரு குழந்தைக்கு உணவளிப்பதாக தொடர்பு கொள்வதற்கான ஒரு எமோஜியாகும். எமோஜியை முன்மொழிவது கூகிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, எவரும் ஒரு முன்மொழிதலை சமர்ப்பிக்கலாம்.

Sharing is caring!