12GB RAM உடன் அறிமுகமாகியது புதிய ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி

சீனாவின் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Xiaomi ஆனது Black Shark 3S எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.67 அங்குல அளவுடையதும், 1080×2400 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 865 processor, பிரதான நினைவகமாக 12GB RAM, 128GB, 256GB, 512GB எனும் மூன்று வகையான சேமிப்பகங்களுடன் கூடிய வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அன்ரோயிட் 10 இங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் டுவல் சிம் வதி தரப்பட்டுள்ளது.

தவிர 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 13 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியின் விலையானது இந்திய நாணயப் பெறுமதியில் 42,900 ரூபாய்கள் ஆகும்.

Sharing is caring!