2020ல் செவ்வாயை ஆராய புறப்படும் மார்ஸ் ஹெலிகாப்டர்

தற்போதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து செவ்வாயின் வான் பரப்பில் பறக்கவுள்ள சில ஹெலிகாப்டர்கள் மூலம் வேற்றுகிரகங்களை பற்றிய ஆய்வில் முற்றிலும் புதிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும்.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தி, பிப்ரவரி 2021ல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க திட்டமிட்டுள்ள நாசாவின் மார்ஸ் 2020 ரோவர் மிஷனின் ஒரு பகுதியாக, தானியங்கி மினி-ஹெலிகாப்டர் ஒன்றும் விண்ணில் பறக்கவுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் செவ்வாயின் வான்பரப்பில் அதிகபட்சமாக 5 குறுகிய பயணங்களை மேற்கொள்ளமுடியும். இந்த முன்னோடியான திட்டம் வெற்றி பெரும்பட்சத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும். தற்போது வேற்றுகிரகங்களை ஆராய மனிதர்களுக்கு உள்ள பல்வேறு தடைகளை தகர்த்தெறியும் விதமாக இந்த ரோபோ ஆராய்ச்சியாளர்களின் வளர்ச்சி அமையும்.

ப்ளைட் கண்ட்ரோல் செவ்வாய் கிரகத்தில் புதிய வகையான ஆராய்ச்சிக்களுக்கான கதவுகளை இந்த ஹெலிகாப்டர்கள் திறக்கும் என நம்புவதாக மார்ஸ் ஹெலிகாப்டர் திட்டத்தின் ப்ளைட் கண்ட்ரோல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் லீட் ஹாவார்ட் கிரிப், நாசாவின் எதிர்கால விண்வெளி செயல்பாடுகள் தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார்.

நாசாவின் ஜெட் உந்துசக்தி ஆய்வகம் மேலும் மேம்படுத்தப்பட்ட இதுபோன்ற ஹெலிகாப்டர்கள் ஒரு நாள் ரோவர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் அல்லது தங்களே சொந்தமாக செவ்வாய் கிரகத்தை ஆராயவும் முடியும் என்கிறார் கிரிப். இவர் நாசாவின் ஜெட் உந்துசக்தி ஆய்வகம் மற்றும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்தவராவார்.

இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் 4 பவுண்ட் எடையுள்ளது. (1.8 கிலோகிராம்) மற்றும் இதன் உடல்பகுதியானது சாப்ட்பாஃலின் அளவே இருக்கும். இதில் மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், சிறிய அளவிலான சூரியசக்தி பேனல், ரிச்சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரிகள், கடும் குளிர்நிலவும் செவ்வாயின் இரவுகளில் மின்னணு பொருட்களை பாதுகாக்க சர்வைவல் ஹீட்டர்கள் ஆகியவை ஆகியவை உள்ளன.

இந்த ஹெலிகாப்டர் எந்தவொரு அறிவியல் உபகரணங்களும் இல்லாத நிலையில், உயர்தர கலர் இமேஜர் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி தான் அதிகமாக பேசவேண்டும். ஏனெனில் அவற்றை பயன்படுத்தியே உயர்தர புகைப்படங்களை எடுத்து அவற்றை பூமிக்கு அனுப்ப முடியும்” என்கிறார் கிரிப்.

Sharing is caring!