2022ம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம்

2022ம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ முன்னெடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விண்வெளிக்கு செல்லும் மனிதர்களுக்கான பிரத்யேக விண்வெளி உடையை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இந்த விண்வெளி உடை மற்றும் விண்கலம் மாதிரி போன்றவைற்றை இஸ்ரோ காட்சிக்கு வைத்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்போ 6து எடிசன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் ரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேல் கலந்துகொண்டு பேசினார். அப்போது , இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேல் தெரிவித்தார்.

ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுசெய்து வரும் நிலையில், இஸ்ரோவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி 2022ம் ஆண்டு இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.

இந்தத் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளிக் குப்பைகள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அமைப்பு என அனைத்துத் துறைக்கும் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனன்ர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் ஸ்பேஷ் எக்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஸ்பேஸ் எக்ஸ்போவில் இஸ்ரோ உருவாக்கிய ஒரு விண்வெளி மனிதர்கள் அணியும் உடை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த உடையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றை வைக்கப்பட்டு இருக்கும். விண்வெளி வீரர் 60 நிமிடங்கள் இடைவெளியில் சுவாசிக்கும் வகையில் இந்த உடை தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த உடை திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் மையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!