5 ஆயிரம் கிலோவில் கிச்சடி… பாஜ செய்த கின்னஸ் முயற்சி

புதுடில்லி:
பாஜ சார்பில் 5000 கிலோ கிச்சடி செய்து உலக சாதனைக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற, அக்கட்சியின் பிரமாண்ட கூட்டத்தின்போது, 5,000 கிலோ கிச்சடி செய்து, உலக சாதனைக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று ராம்லீலா மைதானத்தில் அமித் ஷா பங்கேற்ற, பிரமாண்ட கூட்டம் நடந்தது. இதில் டில்லியில் உள்ள தலித்துகளின் வீடுகளில் பெறப்பட்ட அரிசி மற்றும் பயறு வகைகளை பயன்படுத்தி, 5,000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது.

இந்த கிச்சடி பா.ஜ., தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த, 2017 நவம்பரில் டில்லியில் மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்திய உணவு திருவிழாவின் போது பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர், 918 கிலோ கிச்சடிசெய்தார்.

அது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, 5,000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டுள்ளது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!