5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது

இந்தியர்களின் கணக்குகள் உள்பட 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் இந்தியர்களின் பேஸ்புக் கணக்குகளை திருடி, தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்த காங்கிரசுக்கு லண்டனை சேர்ந்த தனியார் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த நிறுவனத்தை மத்திய அரசு கண்டித்ததை தொடர்ந்து, இப்பிரச்னை பெரியளவில் வெடித்தது.

அதன் பிறகு, இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காமல் தடுப்பதற்காக பேஸ்புக் வலைதளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும் என இதன் தலைவர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்தார்.

இந்நிலையில், பேஸ்புக் கணக்கில் இருந்து மீண்டும் 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று முன்தினம் ஜூகர்பெர்க்கே இந்த உண்மையை வெளியிட்டார். பேட்டியில் அவர் கூறியதாவது: மர்மநபர்களால் பேஸ்புக்கின்5 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

அவை எதற்காக திருடப்பட்டுள்ளன மற்றும் அந்த தகவல்களை தவறாக பயன்படுத்தும் நோக்கில் திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திருட்டை, பேஸ்புக் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 கோடி பயனாளர்களின் கணக்குகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த திருட்டில் அதிகளவில் இந்திய பயனாளிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ‘லாக் அவுட்’ செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் கணக்கில் நுழைய, ‘லாக் இன்’ செய்தால் போதுமானது என்றார்..

Sharing is caring!