5G தொழில்நுட்ப உருவாக்கத்தில் NOKIA
Nokia நிறுவனம் பயனாளர்களுக்காக அதிரடி முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய அடுத்த தலைமுறைக்கான 5G தொழில்நுட்பத்தை Nokia நிறுவனம் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடம் இருந்து, Nokia நிறுவனம் 500 மில்லியன் யூரோ கடன் பெற்றுள்ளது.
5G தொழில்நுட்பம் அதி வேக திறனை கொண்டுள்ளது. 4G வேக தொழில்நுட்ப கட்டமைப்பை விடவும் 50 இலிருந்து 100 மடங்கு வேகமான தகவல் பரிமாற்றத்திற்கு 5G தொழில்நுட்பம் வகை செய்யும்.
சாரதியற்ற வாகனம் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கு முக்கிய கட்டமைப்பாக இது காணப்படும் என கூறப்படுகின்றது.
5G திறன் வேகம் மற்றும் விசாலமாகச் செயல்படக்கூடியது, அது நிலையான இணைப்புகளையும் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S