மொபைல் இல்லாமல் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்?!

நம்மில் பெரும்பாலோனோர் வீட்டில் இருந்தே வேலைபார்ப்பதாலும், அலுவலகங்களில் வேலை பார்த்தாலும் நாம் அதிகம்  பயன்படுத்தும்  வாட்ஸ்அப்பை மொபைலிலும் டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்த விரும்புகிறோம். ஆனால் டெஸ்க்டாப்பில் மட்டும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அம்சம் என்பது இதுவரை இல்லை. ஆனால், வாட்ஸ்அப்பின் போட்டி பயன்பாடுகளான சிக்னல், டெலிகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற சமூக ஊடக தளங்களில் இந்த அம்சம் கிடைக்கிறது. அதாவது சிக்னல் டெலிகிராம் போன்றவற்றில் மொபைல் இணைப்பு இல்லாமலே நீங்கள் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும்.

இப்போதுவரை, வாட்ஸ்அப் ஒரு Web Client வசதியுடன் மட்டுமே வருகிறது, இது பயனர்களை ஸ்மார்ட்போன் மூலம் டெஸ்க்டாப்பில் இணைக்க அனுமதிக்கிறது, ஆனால் சமீபத்திய பீட்டா செயலியில் கிடைக்கும் தகவல்களின் படி, விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HackRead தளத்தில் இருந்து வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, Whatsapp Web இன்டர்ஃபேஸ்க்கான புதிய பீட்டா சோதனையில் உங்கள் மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப்பில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வாட்ஸ்அப் கேட்கவில்லை, அதுமட்டுமில்லாமல் மொபைல் சாதனம் இணைய இணைப்புடன் இருக்க வேண்டியதன் தேவையையும் நீக்குகிறது.

வரவிருக்கும் இந்த புதிய அம்சத்தில் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் அம்சத்தைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சத்திற்கான வெளியீட்டு தேதியை வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் பயனர்கள் விரைவில் இணைய இணைப்பு இல்லாமல் தங்கள் டெஸ்க்டாப் PC களில் வாட்ஸ்அப் சேவையை மொபைல் இணைப்பு இல்லாமல் பயன்படுத்த முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

Sharing is caring!