வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு புதிய அம்சம் வந்ததை கவனித்தீர்களா?

உடனடி செய்தி பயன்பாடான வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்ட இந்த புதுப்பிப்புக்குப் பிறகு, இப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் முன்பை விட வாட்ஸ்அப் chat box இல் பெரிதாகத் தோன்றும். நிறுவனம் இந்த அம்சத்தை ஒரு ட்வீட் மூலம் அறிவித்துள்ளது, அத்துடன் புதிய அம்சம் எவ்வாறு தோன்றும் என்பதற்கான எடுத்துக்காட்டும் அதில் காண்பிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் ஒரு புகைப்படம் அனுப்பப்படும்போது, ​​அதன் முன்னோட்டம் சதுர வடிவத்தில் தோன்றும். அதாவது, புகைப்படம் நீளமாக இருந்தால், அது preview இல் துண்டாகாமல் முழுமையாக தெரியும்.

இதற்கு முன்னதாக புகைப்படத்தை முழுமையாகக் காண, நீங்கள் அதை டவுன்லோடு செய்த பிறகு மீண்டும் கிளிக் செய்து திறக்க வேண்டும். ஆனால், இப்போது புகைப்படத்தைப் பதிவிறக்கிய பிறகு, புகைப்படத்தைத் திறக்காமலேயே முழுமையாகப் பார்க்க முடியும். படத்தின் அளவின் preview ஒரே மாதிரியாக இருக்கும்.

புகைப்படங்களைத் தவிர, இந்த அம்சம் வீடியோக்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இது பயனுள்ளதாக இருந்தாலும் இது வாட்ஸ்அப்பின் பெரிய மாற்றம் அல்ல. வாட்ஸ்அப் இந்த அம்சத்தை iOS பயனர்களுக்காக கடந்த மாதம் ஆப் ஸ்டோரில் புதுப்பிப்பு பதிப்பு 2.21.71 உடன் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைத்துள்ளது.

ட்விட்டரும் இதே போன்ற அம்சத்தில் செயல்படுகிறது. சமீபத்தில், ட்விட்டர் டைம்லைனில் புகைப்படங்களை முழுமையாக பார்க்கும் வகையில் அதற்கான சோதனையை ட்விட்டர் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. தற்போது, ​​ட்வீட்டில் பாதி படம் தோன்றுகிறது. பயனர்கள் முழு படத்தைப் பார்க்க ட்வீட்டைக் கிளிக் செய்ய வேண்டும். வரவிருக்கும் புதிய அம்சம் அதை மாற்றியமைக்க உள்ளது.

Sharing is caring!