வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஆடியோ மெசேஜை FAST FORWARD செய்ய புதிய வசதியை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நீண்ட ஆடியோ மெசேஜ்களை கேட்பதை எளிதாக்கும் புதிய அம்சத்தை தான் இந்நிறுவனம் கொண்டுவர உள்ளது.

எவ்வாறு ஏனெனில் ஒரு வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜை 1.5எக்ஸ் அல்லது 2எக்ஸ் வேகத்தில் பிளே செய்து இயக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களை கேட்டகாலம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிலும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் மிகவும் மெதுவாகப் பேசும் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை உங்களுக்கு அனுப்பினால், அந்த மெசேஜை நீங்கள் விரைவாகப் புரிந்துகொள்ள இந்த FAST FORWARD அம்சம் அருமையாக உதவும்.

ஆனால் இந்த புதிய வசதி தற்போது பீட்டாவில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் வெர்ஷன் 2.21.60.11 இந்த அம்சத்துடன் வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!