ஹூவாய்-ன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் வரும் 22ம் தேதி வெளியீடு

ஹூவாய்-ன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்… உள்மடிப்பு வடிவமைப்போடு ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளியீட்டு நிகழ்வு சீனாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 உள்மடிப்பு வடிவமைப்போடு வரும் எனவும் இது கிரீன் 9000 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 என்எம் செயல்முறை அடிப்படையில் ஹூவாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரின் 9000 எஸ்ஓசி-ஐ அறிமுகம் செய்தது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 மாடல் 8.01 இன்ச் மடிப்பு திறை 2480 x 2220 தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. வெளிப்புற தோற்றம் டிஸ்ப்ளே 6.45 இன்ச் அளவில் இருக்கும் எனவும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 சாதனம் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டிருக்கும் எனவும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் ஐந்தாம் நிலை கேமரா ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

ஹூட்டின் தகவலின்படி, சாதனம் கிரீன் 9000 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் இது 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4400 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Sharing is caring!