iPhone 11 கைப்பேசியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Slofie வசதி

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் iPhone 11 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசிகளில் கமெராவுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை வழக்கமான செல்ஃபி வசதியுடன் Slofie எனும் வசதியினையும் அறிமுகம் செய்திருந்தது.

இது ஒரு வீடியோ பதிவு வசதியாகும்.

அதாவது செல்ஃபி போன்றே தமது செயற்பாடுகளை பயனர்கள் Slow Motion இல் வீடியோ பதிவு செய்துகொள்ள முடியும்

இதனாலேயே Slofie எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவ் வசதியினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும்பொருட்டு ஆப்பிள் நிறுவனம் Slofie வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுவருகின்றது.

அவ்வாறு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை இங்கே காணலாம்.

Sharing is caring!