iPhone 12 எப்போது அறிமுகம் செய்யப்படுகின்றது தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் அறிமுகம் செய்து வந்துள்ளது.

எனினும் இவ் வருடம் உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக iPhone 12 கைப்பேசியினை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி iPhone 12 கைப்பேசியினை அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய் கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது நான்கு வகையான புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவற்றில் iPhone 12 Pro, iPhone 12 Pro Max என்பனவும் அடங்கும்.

Sharing is caring!