புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக்!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கீக்பென்ச் தளத்தில் நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

இத்தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி 128 ஜிபி மெமரி, புளூ மற்றும் சேன்ட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.

இதுமட்டுமின்றி 6 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட நோக்கியா எக்ஸ்10 ஸ்மார்ட்போனும் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த சீரிஸ் ஐரோப்பியாவில் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!