இனி வாட்ஸ் அப் வீடியோ கால் அழைப்பை கணினியிலும் பயன்படுத்தலாம்..!!

வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் மூலம் வாய்ஸ் கால் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும். கம்ப்யூட்டரிலும் கூட வாட்ஸ் அப் செயலியின் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலை செய்து கொள்ள முடியும்.

மேலும், வாட்ஸ் அப். அவ்வப்போது அப்டேட்கள் கொடுக்கப்பட்டு பயனர்களுக்கு வசதியாக மாற்றம் செய்யப்படுகிறது.

சின்ன சின்ன அப்டேட்கள் மூலம் பயனர்களை கவர்ந்து வருகிறது வாட்ஸ் அப். செல்போன் மட்டுமின்றி கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதி உள்ளது.

இந்த நிலையில் தற்போது கணினிக்கான வாட்ஸ் அப் செயலியில் மிக முக்கியமான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.

அதாவது வீடியோ மற்றும ஆடியோ கால் வசதியை கொண்டுவந்துள்ளது. தற்போது, ஒருவருக்கு மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதி கொண்டு வந்துள்ள வாட்ஸ் அப் விரைவில் குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோகால் வசதியை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக ஒரே நேரத்தில் ஒருவரிடம் மட்டுமே இந்த வீடியோ காலில் பேச முடியும். ஆனால் குழு அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்காலத்தில் சேர்க்க, இந்த அம்சத்தை விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளது.

வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு இருக்கும் end-to-end encryption ஆப்ஷனை போல் டெஸ்க்டாபில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ காலுக்கும் end-to-end encryption ஆப்ஷன் இருப்பது உறுதி செய்துள்ளது.

Sharing is caring!