Oppo நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

சீனாவின் பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Oppo ஆனது Oppo A91 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பியல்புகள் தொடர்பான தகவல்களை இப்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி 6.4 அங்குல அளவுடையதும் Full HD+ தொடுதிரையினைக் கொண்டதுமான இக் கைப்பேசியில் Helio P70 mobile processor பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரதான நினைவகமாக 8GB RAM தரப்பட்டுள்ளதுடன், 128GB சேமிப்பு நினைவகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் சேமிப்பு நினைவத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் மேலும் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தம் 4 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

அன்ரோயிட் 9.0 மற்றும் ColorOS 61 ஐ கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 285 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Sharing is caring!