ஸ்னாப்டிராகன் 768 செயலி உடன் ஓப்போ K9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஓப்போ வியாழக்கிழமை அன்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. ஓப்போ K9 5ஜி என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் சீனாவில் கிடைக்கும். இந்த கைபேசி மூன்று வகைகளில் வருகிறது, இதன் ஆரம்ப விலை 1,999 யுவான் (தோராயமாக ரூ.22,700) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பேட்ஸ் K மற்றும் விங்ஸ் ஆஃப் சிம்பொனி வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஓப்போ K9 5 ஜி 6.43 இன்ச் டிஸ்ப்ளேவுடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட், AMOLED பேனல், முழு HD+ ரெசல்யூஷன், 90 Hz புதுப்பிப்பு வீதம், 144 Hz touch sampling rate மற்றும் 20:9 என்ற திரை விகிதத்துடன் வருகிறது. தொலைபேசி திரையில் கைரேகை ரீடருடன் வருகிறது.

செயல்திறனுக்காக, ஓப்போ K9 5ஜி குவால்காமின் ஸ்னாப்டிராகன் 768 செயலியில் இயங்குகிறது. தொலைபேசி 8 ஜிபி ரேம் (LPDDR4X) மற்றும் 256 ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் உடன் வருகிறது. விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தை ஆதரிக்கும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டும் உள்ளது. மென்பொருள் முன்னணியில், இது Android 11- அடிப்படையிலான ColorOS 11.1 இல் இயங்குகிறது.

இது 65W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,300 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வேகமான சார்ஜர் மூலம் 35 நிமிடங்களில் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 5ஜி, புளூடூத் 5.1, GPS, யூ.எஸ்.பி டைப்-C ஆதரவு மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவை இருக்கும்.

கேமரா அமைப்பைப்’ பொறுத்தவரை, ஓப்போ K9 5ஜி 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. பின்புறத்தில், இது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார், 119 டிகிரி FoV மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

கூடுதல் தகவலாக, ஓப்போ இந்தியாவில் தனது A53 கைபேசியின் விலையை குறைத்துள்ளது. தொலைபேசி தற்போது ரூ.10,990 விலையில் கிடைக்கிறது, இது அசல் வெளியீட்டு விலையான ரூ.12,990 இலிருந்து ரூ.2000 குறைக்கப்பட்டு விற்பனைச் செய்யப்படுகிறது. 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 செயலி, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவை தொலைபேசியின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

Sharing is caring!