போக்கோ F3 GT இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

போக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 1200 பிராசஸர், கேமிங் ட்ரிகர்களை கொண்டிருக்கிறது.

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் ஜூலை 23 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், காந்த சக்தி கொண்ட இரு ட்ரிகர்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் டால்பி அட்மோஸ் ஆடியோ அம்சம் கொண்டிருக்கும் என புதிய டீசரில் தெரியவந்துள்ளது. முந்தைய டீசரில் போக்கோ F3 GT கிளாஸ் பாடி, ஸ்லிப்-ஸ்டிரீம் டிசைன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதன் பின்புறம் கைரேகை பதியாத வகையில் மேட் பினிஷ் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏரோஸ்பேஸ்-ரக அலுமினியம் அலாய் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போக்கோ F3 GT மாடல் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, HDR 10+, டிசி டிம்மிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் கன்மெட்டல் சில்வர், பிரிடேட்டர் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!