விலை 5 லட்சம்… அட்வான்ஸ் ஒரு லட்சம் தான்! இது கார் விலை அல்ல பைக் விலை!!

BMW நிறுவனம் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய சி400 ஜிடி என்ற ஸ்கூட்டர் இந்தியாவில் நாளை அறிமுகமாகும் என BMW நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான டீசரைஅந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கிறது. அறிமுகமானதும் இந்திய சந்தையின்விலை உயர்ந்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி பெறும்.

இந்த மாடல் ஸ்கூட்டர் வரிகள் சேர்க்கப்படாமல் இந்தியாவில் ரூ. 5 லட்சத்திற்கு விற்கப்படும் என தெரிகிறது. இந்தமாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம். பி 350 சிசி, சிங்கில் சிலிண்டர், வாட்டர் கூல்டுபெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது.

என்ஜின் 34 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். புதிய பி.எம்.டபிள்யூ. ஸ்கூட்டர்மணிக்கு அதிகபட்சம் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

தற்போது வரை 100க்கும் அதிகமான பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sharing is caring!