முற்றிலும் மாறுபட்ட புது பெயரில் PUBG இந்தியாவில் வெளியாகிறது?! | ரசிகர்களுக்கு இந்த பெயர் பிடிக்குமா?

Winner winner chicken dinner என்று நம்ம ஊரு பசங்க சந்தோசமா கேம் விளையாடி பல மாதங்கள் ஆகின்றன. சீன செயலிகளை தடுக்கும் நடவடிக்கையின் போது, சீன நிறுவனமான டென்சென்ட் உடன் கூட்டு வைத்திருந்ததற்காக PUBG மொபைல் கேமையும் இந்திய அரசு தடை செய்தது. அதை அடுத்து PUBG மொபைல் இந்தியா நிறுவனம் பல முறை PUBG கேமை இந்தியாவில் அறிமுகம் செய்ய விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

PUBG மொபைல் இந்தியா நிறுவனத்தின் விடாமுயற்சியால் விரைவில் இந்தியாவில் மீண்டும் PUBG வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்ன வென்றால், கேம் டெவலப்பர் PUBG மொபைல் கேமை ஒரு புதிய பெயருடன் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக “PUBG மொபைல் இந்தியா” என்ற பெயரில் இந்த கேம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், PUBG மொபைல் கேமின் டெவலப்பரான கிராஃப்டன், இந்த கேம் பெயரை ‘Battlegrounds Mobile India’ என்ற பெயரில் அறிமுகம் செய்யும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

PUBG மொபைல் இல்லாத நிலையில், மொபைல் கேம் பிரியர்கள் கால் ஆஃப் டூட்டி, ஃப்ரீ ஃபயர் போன்ற பிற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். PUBG இந்தியாவில் புது பெயருடன் அறிமுகம் ஆன பிறகு இது எந்த அளவுக்கு வரவேற்பைப் பெரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sharing is caring!