ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்?

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் மெமரி ஆப்ஷன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் ஒற்றை மெமரி ஆப்ஷனில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 14,999 என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முதல் விற்பனைக்கு சியோமி அறிமுக சலுகைகளை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த ஸ்மார்ட்போன் புளூ, கிரீன், கிரே மற்றும் சில்வர் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Sharing is caring!