இந்தியாவில் விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டு இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W அதிகபட்ச சார்ஜிங் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இருக்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் கொண்டு இருக்கலாம்.

Sharing is caring!