வரும் மார்ச் மாதம் அறிமுகமாகிறது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்

போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Poco X3 ஸ்மார்ட்போன் 6.67′ இன்ச் கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடனான AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இயங்குதளம் என எடுத்துக் கொண்டால் போக்கோ X3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மூலம் இயங்குவதாக உள்ளது.

பேட்டரி அளவு என எடுத்துக் கொண்டால் 6000 mAh பேட்டரியுடன் கூடிய 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை Poco X3 ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை ஸ்கேனர், IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பம் என எடுத்துக் கொண்டால் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.மேலும் இது ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி கொண்டு இருக்கலாம்.

மெமரி அளவு என எடுத்துக் கொண்டால் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு இருக்கலாம்.

கேமரா அளவு என எடுத்துக் கொண்டால் Poco X3 ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 13 மெகாபிக்சல் கொண்ட 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட 4cm மேக்ரோ சென்சார் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமரா கொண்டு இருக்கலாம்.

Sharing is caring!