வயோ SE14 மற்றும் SX14 கார்பன் எல்சிடி கவர் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்!

வயோ மேலும் இரண்டு விண்டோஸ் 10 OS அடிப்படையிலான அல்ட்ராபுக் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வயோ SE14 மற்றும் வயோ SX14 மடிக்கணினிகள் விரைவில் அமேசான் இந்தியா வழியாக இந்தியாவில் விற்பனைக்கு செய்யப்படும்.

விலையைப் பொருத்தவரை, வயோ SE14 மடிக்கணினி இந்தியாவில் ரூ.88,990 ஆகவும், பிரீமியம் வயோ SX14 லேப்டாப் இந்தியாவில் ரூ.1,72,990 விலையிலும் கிடைக்கும்.

அம்சங்களைப் பொறுத்தவரையில், வயோ SE14 மடிக்கணினி 14 அங்குல முழு HD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 11 வது தலைமுறை இன்டெல் கோர் i5 மற்றும் i7 செயலிகளால் இயக்கப்படுகிறது. இந்த செயலி 16 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி ROM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 12 மணிநேர பேட்டரி லைஃப்  வழங்குகிறது மற்றும் இது விண்டோஸ் 10 ஹோம் இல் இயங்குகிறது.

இணைப்பு முன்னணியில், இந்த லேப்டாப்பில் ஒரு HDMI போர்ட், இரண்டு யூ.எஸ்.பி 3.2 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், மைக்ரோ SD கார்டு ரீடர் மற்றும் ஒரு ஹெட்போன் ஜேக் உள்ளது.

இணைப்பு அம்சங்களில் வைஃபை 802.11, புளூடூத் 5.1 ஐயும் கொண்டுள்ளது. 1080p IR வெப் கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆகியவை பிற அம்சங்களில் அடங்கும். இது ரெட் காப்பர் மற்றும் டார்க் கிரே கலர் வகைகளில் கிடைக்கிறது.

வயோ SX14, 14 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 4K அல்ட்ரா ரெசல்யூஷன் மற்றும் டால்பி ஆடியோ ஸ்பீக்கருடன் வருகிறது. இது இன்டெல்லின் கோர் i7 செயலி உடன் இயக்கப்படுகிறது. இது ஒரு யூ.எஸ்.பி டைப்-CTM போர்ட், மூன்று யூ.எஸ்.பி போர்ட்கள், ஒரு HDMI போர்ட், VGA இணைப்பு மற்றும் LAN இணைப்புடன் வருகிறது. இது 1TB வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது 7.5 மணி நேரம் வரை பேட்டரி லைஃப் வழங்குகிறது மற்றும் இது விண்டோஸ் 10 ப்ரோ OS உடன் இயங்குகிறது.

Sharing is caring!