Vivo விரைவில் Vivo S7e எனும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது
சீன ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Vivo விரைவில் Vivo S7e எனும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி குறித்த கைப்பேசியானது 6.44 அங்குல அளவுடையதும், 2400 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் MediaTek Dimensity 800U mobile processor, 4100 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.
எனினும் இதன் சேமிப்பு நினைவகம் மற்றும் பிரதான நினைவகம் என்பவற்றின் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S