YouTube இன் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்த நவீன யுகத்தில் எதற்கெடுத்தாலும் யூடியூப் தான். சட்டை மடிப்பது முதல் சட்னி சாம்பார் வைப்பது வரை அனைத்திற்கும் யூடியூப் தான். நாம் இவ்வளவு  அதிகமாக யூடியூப் பயன்படுத்துகிறோமே இதனால் யாருக்கு நன்மை என்ன நன்மை என்று எவ்வளவு பேர் யோசித்திருப்போம்? மொத்த எண்ணிக்கையில் மிகச் சொற்பமான மக்கள் தான் இதைபற்றி எல்லாம் யோசித்திருப்பார்கள். கூகிள் தான் யூடியூப் தளத்தின் உரிமையாளர். நாம் வீடியோ பார்க்கும்போது அதில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் மூலமாக தான் யூடியூப் தளம் மூலம் கூகிளிற்கு வருமானம் வருகிறது. அது எவ்வளவு? என்ன ஏது என்று தான் இந்த வீடியோ பதிவில் பார்க்கப்போகிறோம்.

கூகிள் 2019 ஆம் ஆண்டில் யூடியூப் விளம்பரங்களிலிருந்து 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதாவது இந்திய ரூபாய்களில் சொல்லவேண்டுமானால் தோராயமாக 1500 கோடி ருபாய்க்கு மேல் பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை, ஆல்பாபெட் நிறுவனத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகும்.  இந்த கணக்கீடு வீடியோ தளத்திலிருந்து சந்தாக்கள் உட்பட பிற வருவாய் ஆதாரங்களைச் சேர்க்கவில்லை.

ஆல்பாபெட்டின் நான்காம் காலாண்டு வருவாய் அழைப்பிற்கு முன்னதாக, கூகிள் அதன் வளர்ந்து வரும் கிலௌட் வணிகத்திற்கான வருவாயுடன் எண்களை வெளியிட்டது,

“தேடலில் எங்கள் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் எங்கள் புதிய வளர்ச்சிப் பகுதிகளை உருவாக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். யூடியூப், ஏற்கனவே ஆண்டு விளம்பர வருவாயில் 15 பில்லியன் டாலர் மற்றும் கிளவுட், இப்போது 10 பில்லியன் டாலர் வருவாய் விகிதத்தில் உள்ளது,” என்று தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஒரு அறிக்கையில் கூறினார்.

2017 ஆண்டு யூடியூப்பின் விளம்பர வணிகம் எவ்வளவு விரைவாக வளர்ந்துள்ளது என்பதை இந்த வருவாய் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் யூடியூப் வீடியோ தளம் 2017 ஆம் ஆண்டில் 8.1 பில்லியன் மட்டுமே வருவாய் எட்டியிருந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டில் அது அப்படியே இரண்டு மடங்காக ஆகியுள்ளது.

யூடியூப்பின் சந்தா வணிகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் இப்போது யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் நிறுவனங்களுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், யூடியூப் டிவியில் 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, சந்தாக்கள் மற்றும் வர்த்தகத்தை உள்ளடக்கிய YouTube இன் விளம்பரமற்ற வருவாய் 3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Sharing is caring!