அனலைதீவு ஐயனார் கோவில் நயினாகுளம் மீள்கட்டுமான பணியில்

அனலைதீவு ஐயனார் கோவில் நயினாகுளம் அரச நிதி ஒதுக்கீட்டு உதவியுடன் அனலைதீவு விவசாய சம்மேளனம் பொறுப்பேற்று மீழ்கட்டமைக்கும் பணி நடைபெறுகின்றது. நீண்டகாலமாக பொதுவெளியினூடாக சமூகத்தின் பேசுபொருளாக முன்வைக்கப்பட்ட இப்பணியானது நமது மண்ணினதும் மக்களினதும் நீண்டகால வாழ்வியலை மேம்படுத்க்கூடிய திருப்பணியாகும்.சமூகத்தின் தேவைகளை தொடர்ச்சியான பேசுபொருளாக பேசிக்கொண்டிருப்பது நீண்டகால அடிப்படையில் ஒரு நல்ல விளைவைத்தரும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
இன்றைய கருத்துப் பதிவுகளும் நமக்கு நல்ல பயனைத்தரும். சிறப்புமிக்க இத்திருப்பணி நடைமுறை வடிவம்பெற ஒத்துழைப்பு வழங்கிய பெருமதிப்பிற்குரிய அரச அலுவலர்கள், பொதுமக்கள், அனலைதீவு விவசாய சம்மேளனம் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
குடிநீர் வளத்தையும் நிலத்தடிநீர் சேமிப்பையும் உறுதிசெய்யும் இந்த நயினாகுள புனரமைப்பு பயனுள்ளதாக அமைவதற்கு நாம் அனலைதீவிலுள்ள குடிநீர்க்கிணறுகளின் வளத்தை பாதுகாக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்வதே முக்கியமான கடமையாகும்.
இந்த நற்பணிக்கு அனலைதீவு கலாசார ஒன்றியம், அனலைதீவு விவசாய சம்மேளனத்திற்கு முதற்கட்ட பொறுப்பு நிதியாக ஐந்து இலட்சம் ரூபாவிற்கான உறுதிப்பாட்டை முன்மொழிந்துள்ளது.

 

Sharing is caring!