அனலைதீவு – கனடா உறவுகளே! பசுமை அனலைதீவு திட்டம்

பசுமை அனலைதீவு எனும்  தன்னார்வ செயற்பாட்டு திட்டத்தின் கீழ் அனலை மண்ணின் மைந்தர்கள் மூலம் அனலைதீவில் தூர்வாரப்படும் குளங்கள் மற்றும் கேணிகள்
அனலையின் நன்னீர் ஏந்துகளான குளங்கள் மற்றும் கேணிகள் என 16-19 மேற்பட்ட நீர்நிலைகளை தூர்வார்ந்து விடுவதன் மூலம் வற்றாத நன்னீர் ஊற்றுகளை கோடை வெயிலும் தக்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மண்ணின் மைந்தர்கள் மூலம் ஆரம்பித்து நடைபெறுகின்றது.
 கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் முதன்மை இலக்காக கொண்டு பசுமை அனலைதீவு எனும் நிறைவு இலக்குடன் ஐரோப்பிய மற்றும் கனடிய இளைஞர்களின் நிதிப்பங்களிப்புடனும் அனலைவாழ் இளைஞர்களின் சரீர உதவிகளுடனும் ஜேசிபி இயந்திர மூலம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசினது செயற்திட்டங்களுக்காய் காத்திருந்து கால்நடைகளும் வரண்ட பூமியும் இன்னும் வற்றிவடாது காக்கும் பொறுப்பு அனலையின் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்னெழுச்சியாய் உண்டாக வேண்டும்.
 சத்தமின்றி சமூகத் தொண்டாற்ற மன்வந்த அனலைதீவு கிழக்கை சேர்ந்த நல் உள்ளங்களுக்கும் இன்னும் ஊரிலும் புலம்பெயர் தேசத்திலிருந்து உதவும் அனலை இளைஞர்களுக்கும்  எமது  பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
தூர்வாரப்படும் குளங்கள் கேணிகள் நீண்டகால திட்டத்துடன் கூடிய பாவனைக்கு சீமெந்து படிகள் மற்றும் சுவர்களை எழுப்பி உதவவேண்டியது அடுத்த கட்டநடவடிக்கையாகும் இதனை உரியமுறையில் நடைமுறைப்படுத்த ஊரிலும்  வெளியூரிலும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனலைமக்கள் முன்வரவேணடும்
பசுமை அனலைதீவு திட்டத்தின் கீழ்,  அனலையில் உள்ள குளங்கள், கேணிகள்,  மற்றும் பொதுக் கிணறுகள்  தூர்வாரப்படுவதை தாங்கள் அறிவீர்கள்.
இதுவரை
தில்லன்குழி குளம்
சுடலைப்புல கேணி
ஐயனார் தீர்த்தக்கரை கேணி
தரவை ஆவுரஞ்சி குளம்
என்பன தூர்வார பட்டுள்ளன,  எனினும் குறித்தை செயற்பாட்டை தொடரத் தேவையான   நிதி உதவிகள் எதிர்பார்க்க படுகின்றது.
ஆகவே உங்களால் முடிந்த நிதி உதவிகள் மற்றும் ஆதரவு கரம் நீட்டி   எங்கள்  பசுமை அனலைதீவு  திட்டத்திற்கு ஊக்குவிப்பு   தருமாறு கேட்டு கொள்கிறோம்.
நன்றி,
இணைப்பாளர்கள்
சயன் குலசந்திரதாசன்- UK
பிரபா குமரேசன்- அனலை
அரி பரமலிங்கம்-கனடா
 The long-term project ‘Green Analai’ is the action that we are finally taking to provide fresh, healthy water, and plant trees. Our island once used to be entirely green with fresh, drinkable water that was provided for the cows of our home. However, lately, freshwater has been particularly difficult to find. We have been working on redesigning the wetlands of Analaitivu so that fresh-water is more accessible. The ponds and kennis have been taint for too long and over many years, we have discussed about this project for the betterment of our home. We have finally taken this matter into our own hands and have decided to take the first step of this extensive task. There are about 20 ponds that we must wipe and redo, so we expect this project to be lengthy and in need of effort and hard work. This project will take up a large amount of time and we expect it to be challenging. That is why we are looking for your support and helping hands. Not only does this affect the animals and plants back home, but this will also allow the wells that people drink from, to have longer-lasting quality water. During this pandemic, we have found time to begin. There are already a few people outside of Analaitivu who have offered to give us a hand. Not only does this project include reestablishing the ponds and planting, but also finding ways to maintain the cleanliness. Eventually, it may come down to employing those to preserve the restructure. If you would like to donate or help in any way in the name of your parents/family, contact us! We are looking for any sort of support and aid. We are hoping that this project will enhance Analaitivu. Contact us regarding this matter via Facebook or Email. Below, we have attached photos of some inspiration and the current situation our ponds are at.
Thank you for your time and generosity.
Hoping you are well,
Team Green Analai
Sayan Kulachandrathasan(UK)
Piraba Kumaresan (Analai)
Ari Paramalingam(Canada)

Sharing is caring!