அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும் நூல் வெளியீடு

ஓய்வு நிலை உதவித்திட்டப் பணிப்பாளர் அரியரத்தினத்தின் அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும் நூல் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 24) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணச் செயலாளர் வே. பொ, பாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வெளியீட்டு விழாவில் நூல் மதிப்பீட்டுரையை பிரதமவிருந்தினரான யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத்தலைவர் பேராசிரியர் எம். வேதநாதனும் நயவுரையை யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கே. தேவராஜாவும் ஆற்றுவார். கனடா கலாசார ஒன்றியப் போஷகர் பி. கணபதிப்பிள்ளை, அனலைதீவு கலாசார ஒன்றியத்தலைவர் பி. நடராஜா ஆகியோர் சிறப்புரைகளையும் நூலாசிரியர் அரியரத்தினத்தின் ஏற்புரையையும் ஆற்றுவர்.

இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வாழ் தாள் பேராசிரியர் எஸ். சத்தியசீலன், ஊர்காவற்முறை பிரதேச செயலர் திருமதி எஸ். மஞ்சுளா தேவி, கனடா மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே, கிருபா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

Sharing is caring!