அனலைதீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர்

றெடித் திட்டத்தின் கீழ் அனலைதீவு பிரதேச வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளர் ம. ஜெயகாந்தன் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் கூட்டுறவுச் சங்க வீதி, வெளிச்சவீட்டு
வீதி, வடக்குளம் வீதி, மேற்குக் கடற்கரை இணைப்பு வீதி, ஆச்சி கோயில் பின் வீதி மற்றும் குடிநீர் கிணற்று வீதி ஆகிய ஆறு வீதிகள் கொங்கிறீற வீதியாக புனரமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

Sharing is caring!