அல்லைப்பிட்டியில் பாரிய தீவிபத்து தடுக்கப்பட்டது….தீயணைப்பு படை, பொதுமக்கள் நீண்டநேர போராட்டம்

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் வயலுக்கு வைத்த தீ கட்டுப்பாடில்லாமல் எரிந்ததையடுத்து பொது மக்களும், தீயணைப்பு படையினரும் இணைந்து நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வயல் அறுபடை முடிந்திருக்கும் நிலையில் விவசாயிகள் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அல்லைப்பிட்டி பகுதியில் சில விஷமிகள் வயலுக்கு தீ வைத்துள்ளனர்.

இதனையடுத்து கொழுந்துவிட்டெரிந்த தீ பனைமரக் கூடல்களில் பற்றியதுடன், மிகவேகமாக ஊர்மனைகளுக்குள்ளும் புகும் அபாயம் எழுந்தது. இதனையடுத்து பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றபோதும்,

அது சாத்தியப்படாத நிலையில் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Sharing is caring!