அல்லைப்பிட்டி றோ.க.த.க. வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஒளிவிழாவும் கணனி மூலை திறப்பு விழாவும்

அல்லைப்பிட்டி றோ.க.த.க. வித்தியாலயத்தின் வருடாந்த பரிவசிளிப்பு விழாவும் ஒளிவிழாவும் கணனி மூலை திறப்பு விழாவும் கடந்த செவ்வாக்கிழமை (5) அன்று பாடசாலையின் அதிபர் திரு. ஏ.N. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமாகிய அருட்பணி. மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார், தீவக ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. சு. குணநாதன் மற்றும் அல்லைப்பிட்டி கிராம உத்தியோகத்தர்தி ரு.நா.திவ்யலக்ஷன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் புதிய நதியா நகைமாட உரிமையாளர் திரு. ச.ஜெகதீஸ்வரன் மற்றும் அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் திரு.ப. றொபேட் பெலிக்ஸ்ஆ கியோரரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட என். கனகரட்ணம் விந்தன் அவர்களின் 2017ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கணனிக் கொள்வனவில் உருவான கனணி மூலையினையும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ‘செயற்பட்டு மகிழ்வோம்’ போட்டியில் கோட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும்புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் வகுப்பு ரீதியாக முதல்நிலை மாணவர்கள் என மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

Sharing is caring!