அல்லை கார்மேல் அன்னையின் பெருநாளை முன்னிட்டுத் தேர்

அல்லைப்பிட்டி புனிதா கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு அன்னையின் பத்தர்களால் 14 லட்சம் ரூபா செலவில் தேர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, தீவுப்பகுதி மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான மனு வேற்பிள்ளை டேவிட் அடிகளார் தலைமையில் 16 ஜூலை அன்று திருநாள் திருப்பலியின் பின்னார் அன்னை இத்தேர்மிது அமர்ந்து வீதியுலா வந்து பாத்தர்களுக்கு அருளாசி வழங்கினார், அல்லைப்பிட்டியைச்சேர்ந்த பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில் ஆலய நிர்வாகத்தினாலும் மற்றம் பிரான்ஸில் வசிக்கும் இவ்வாலயத்தின் பங்கைச் சேர்ந்த பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையிலும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அல்லைப்பிட்டியில் மதவேறுபாடின்றி அனைத்து மக்களாலும் தர்சிக்கப்பட்டுவரும் புனித கார்மேல் அன்னையின் தேர்திருப்பணிக்கு நிதியை பலரும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது திருப்பலியின் பின்னர் பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு, பிரான்ஸில் வசிக்கும் இவ்வால் யத்தின் பங்கைச் சேர்ந்த பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் மற்றும்  செல்லையா சிவா ஆகியோர் கொளரவிக்கப்பட்டனர்.

Sharing is caring!