ஆளுநரால் புங்குடுதீவில் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வட மாகான ஆளுநர் ரெஜிநோல்ட் குரே ஆலோசனைக்கமைய புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதி விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக மடத்துவெளி முதல் குறிஞ்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் நேற்று ( டிசெம்பர் 05) ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் புங்குடுதீவில் வெளிச்சவீட்டிற்கு செல்லும் பாதையினை செப்பனிடும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார். நயினாதீவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் புங்குடுதீவு வெளிச்சவீட்டினையும் பார்வையிடும் வகையில் வீதியினை செப்பனிட்டு அப்பகுதியினை அழகுபடுத்தும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார். புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தினை அண்மித்த கடற்கரை பகுதியினை அழகுபடுத்துவதற்கான மரங்களையும் நாட்டிவைத்தார்.

மேலும் தீவக மக்களின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் மக்களால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கான குளங்கள் புனரமைக்கப்படல், மக்களின் பாதுகாப்பு கருதி வீதி விளக்குகள் பொருத்தப்படல், தீவகத்தில் கல்வித் தேவைக்காக ஆசிரியர்களின் ஆளணியினை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.

Sharing is caring!